தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
West Bengal polls: Mamata Banerjee wins from Nandigram
Read @ANI Story | https://t.co/ImEKyGf62opic.twitter.com/uV6bj3j60c
— ANI Digital (@ani_digital) May 2, 2021
மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 213 இடங்களில் முன்னணி வகிக்கிறது. பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்துமேற்குவங்கத்தில் திரிணாமூல்காங்கிரஸின்வெற்றி உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் மம்தா பானர்ஜி, நந்திகிராமில் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தத மம்தா தற்போது 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளார். காலில் ஏற்பட்ட காயத்தால், சக்கர நாற்காலியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த மம்தா, "நான் ஒற்றைக்காலோடு வங்கத்தை வெல்வேன். இரண்டு கால்களோடுடெல்லியை வெல்வேன்" என கூறியிருந்தார். சொன்னவாரே வங்கத்தை மம்தா வென்றுள்ளார்.