"டெல்லியை சமாளித்துவிட்டு மேற்கு வங்கத்தை பற்றி யோசியுங்கள்" - சட்டப்பேரவையில் மம்தா ஆவேசம்!

MAMATA BANERJEE

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்றுவேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் ட்ராக்டர்பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பாகவிசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மேற்கு வங்கசட்டப்பேரவையில், வேளாண்சட்டங்களுக்கு எதிராகதீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது பேசியமம்தாபானர்ஜி, “டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. முதலில் டெல்லியைச்சமாளித்துமேற்கு வங்கத்தை நினைத்துப் பாருங்கள்” என ஆவேசமாக கூறியுள்ளார்.

வேளாண்சட்டங்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் குறித்துபேசியமம்தாபானர்ஜி, “டெல்லியின் நிலையைகாவல்துறையால் சமாளிக்க முடியவில்லை. ஒருவேளை அது மேற்கு வங்கமாக இருந்திருந்தால், சகோதரர்அமித்ஷா, ‘என்ன நடந்தது’ எனகேட்டிருப்பார். இந்த அணுகுமுறையைநாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த மூன்று சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஒன்று நீங்கள் சட்டங்களைத் திரும்பப் பெறுங்கள் அல்லது நாற்காலியை விட்டு வெளியேறுங்கள்.

நாங்கள் விவசாயிகளுடன் இருக்கிறோம். இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படவேண்டும் என விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் பலவந்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. டெல்லியின் நிலைமையை மோடி அரசு மோசமாக கையாண்டுள்ளது. அங்கு நடந்ததற்கு பாஜகதான் பொறுப்பு. முதலில் டெல்லியைச் சமாளித்துவிட்டு மேற்கு வங்கத்தைப் பற்றி யோசியுங்கள்” எனக் கூறியுள்ளார்.

farm bill Mamata Banerjee west bengal cm
இதையும் படியுங்கள்
Subscribe