mamata - modi

Advertisment

இந்தியவிடுதலைக்காக போராடியநேதாஜிசுபாஷ்சந்திரா போஸின்125 வதுநினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது, நேதாஜியின் பிறந்த நாள், இனி "பராக்கிராம்திவாஸாக" (பராக்கிரமஜெயந்தி)கொண்டாடப்படும் எனமத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் நடைபெறும்முதல் பராக்கிராம்திவாஸ்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நேதாஜியை கௌரவப்படுத்தும்விதமாக அஞ்சல் தலைகளைவெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார்.

இந்தநிகழ்ச்சியில் முதல்வர் மம்தாபானர்ஜி, பேச வந்தபோது, 'ஜெய் ஸ்ரீ ராம்' எனக் கோஷம் எழுந்தது. இதனால் அதிருப்தியடைந்த மம்தாபானர்ஜிபேச மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர், "அரசாங்கநிகழ்ச்சியில் கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஒரு அரசியல் நிகழ்ச்சியல்ல. ஒருவரை அழைத்த பிறகு அவர்களை அவமதிப்பதுஏற்புடையதல்ல. ஒரு போராட்டமாக, நான் எதுவும் பேசமாட்டேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment

பிரதமர் பங்கேற்றவிழாவில், முதல்வர்பேச மறுத்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.