Advertisment

மம்தா கட்சியின் அமைச்சர் திடீர் ராஜினாமா!

wb minister

Advertisment

மேற்கு வங்கத்தில், இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பு நிலவிவருகிறது. கடந்தவருட இறுதியில் அமித்ஷாதலைமைலயிலான பொதுக்கூட்டத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தமுன்னாள் அமைச்சர்சுவேந்து அதிகாரி, மேலும் 6 திரிணாமுல்காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பாஜகவில்இணைந்தார்.

இந்தநிலையில், மம்தாபானர்ஜிகட்சியைச் சேர்ந்தவிளையாட்டுத்துறை அமைச்சர்லக்ஷ்மிரத்தன் சுக்லா, இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது, மேற்கு வங்க அரசியலில்மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து மம்தாபானர்ஜி,"யார் வேண்டுமானாலும் பதவி விலகலாம்.லக்ஷ்மிரத்தன் சுக்லாவிளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தர விரும்புவதாகவும், எம்.எல்.ஏ.வாகதொடர்வதாகவும் தனதுராஜினாமா கடிதத்தில் எழுதியுள்ளார். அதனைஎதிர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்"எனக் கூறியுள்ளார்.

WEST BENGAL CM MAMATA BANERJI
இதையும் படியுங்கள்
Subscribe