இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் மேற்கு வங்கத்திலும் வேகமாக பரவி வருகிறது. 390 பேருக்கு மேல் கரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் மேற்கு வங்கத்தில் குறைந்த அளவில் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் "மேற்கு வங்கத்தில் குறைந்த அளவில் கரோனா பரிசோதனை செய்வதாக வரும் தகவலில் உண்மை இல்லை. இதுவரை 7,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய் தொற்றை பரிசோதிக்க தரமற்ற சோதனை கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது" என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.