Advertisment

"தலைவணங்கமாட்டேன்" - மம்தா பானர்ஜி ஆவேசம்!

mamata

Advertisment

மேற்கு வங்கத்தில் இந்தாண்டு பொதுத்தேர்தல் நடக்க இருப்பதை தொடர்ந்து, அங்கு கட்சி தாவல்கள், வார்த்தை மோதல்கள் என அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அனல் பறந்து வருகிறது.

Advertisment

இந்தநிலையில், கொல்கத்தாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, தான் தலைவணங்கப்போவதில்லை என்றும், பாஜக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளோடு இணைந்து கூடப்போட்டியிடட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், நீங்கள் என்னைஅசிங்கப்படுத்தலாம். ஆனால், உங்களால் என்னைப் புறக்கணிக்க முடியாது. விவசாயிகளைக் கொள்ளையடித்த பிறகு, என் மதத்தைப் பின்பற்ற என்னை அனுமதிக்காததற்குப் பிறகு, கலவரம் செய்தபிறகு உங்களுக்கு வங்காளம் வேண்டுமா?அவர்கள் முன், நான் தலைவணங்கமாட்டேன். நியாயமாக விளையாடுவோம். உங்கள் அணியில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸுடன் நீங்கள் போராடலாம். நாங்கள் தனியாகப் போராடுவோம். நான் ஒரு கோல்கீப்பராக மட்டுமே இருப்பேன்,எத்தனை கோல்களை உங்களால் அடிக்கமுடியும் எனப் பார்க்கலாம். இவ்வாறுதெரிவித்துள்ளார்.

mamata banarjee west bengal
இதையும் படியுங்கள்
Subscribe