Advertisment

பாஜகவின் சவாலை ஏற்று களமிறங்கும் மம்தா!

MAMATA BANERJEE

மேற்கு வங்கத்தில் வருகிறமார்ச்27 ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகசட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பேபரபரப்பாக இருந்து வந்த தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பிறகு சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும், பாஜகவிற்கும் நேரடி போட்டி இருக்குமெனஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு கட்சிகளைத் தவிர, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இரண்டும் இணைந்து போட்டியிடுகின்றன.

Advertisment

இந்தநிலையில், இன்று மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜி, தனதுகட்சியின்வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ள நிலையில், 291 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர் பட்டியலில்50 பெண்கள், 42 முஸ்லிம்கள், 96 பட்டியலினத்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தற்போதைய எம்.எல்.ஏக்கள் மற்றும் மந்திரிகள்உள்படகிட்டத்தட்ட 20 பேருக்குமீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Advertisment

இந்த தேர்தலில்நந்திகிராம்தொகுதியில்நிற்கப்போவதை மம்தாபானர்ஜிஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த தொகுதி சமீபத்தில் திரிணாமுல்காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறியமுன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும்.சுவேந்து அதிகாரி அந்த தொகுதியின் முகம் எனக்கூறப்படுமளவிற்கு நந்திகிராமில் செல்வாக்குஉள்ளவர். அவரைஎதிர்த்து மம்தாநேரடியாகக் களமிறங்குகிறார். நந்திகிராமில் போட்டியிடப் போவதாகதெரிவித்தபோது, இந்த தொகுதியில்மம்தாபோட்டியிட்டால் அவரை50 லட்சம் வாக்குகளில் தோற்கடிப்பேன் அல்லது அரசியலைவிட்டு விலகுவேன்எனத் தெரிவித்திருந்தார். அதேபோல்மேற்கு வங்கபாஜகமேலிடப் பார்வையாளர், அந்த தொகுதியில்நிற்குமாறுமம்தாவிற்கு சவால் விடுத்திருந்தார். சவாலை ஏற்று மம்தா அங்கு போட்டியிடப்போவது, மேற்கு வங்கதேர்தலைஇன்னும் விறுவிறுப்பாகியிருக்கிறது.

Assembly election west bengal Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe