டெல்லியில் நடந்த வன்முறை சம்பவம் மத்திய அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

mamata banerjee about delhi ruckus

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த வாரம் நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லி பதட்டமான சூழலை சந்தித்தது. கண்ணீர்புகைக் குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இந்த கலவரத்தில் கடைகள், வீடுகள் மற்றும் பொதுச்சொத்துகள் ஆகியவை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, "டெல்லியில் நடைபெற்ற கலவரம் மத்திய அரசின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இனப்படுகொலை ஆகும். குஜராத்தில் நடத்திய கலவரத்தைப் போல் நாடு முழுவதும் நடத்துவதற்கு பாஜக முயல்கிறது. டெல்லியில் அப்பாவி மக்கள் உயிரிழந்தது எனக்கு ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், அமித்ஷா அமைதியாக இருக்கிறார். டெல்லி கலவரத்துக்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.