Advertisment

 மூன்றாவது திருமணத்திற்கு தயாரான மல்லையா!!!

Mallya's third marriage

இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9000ஆயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு லண்டனிற்கு தப்பி ஓடிய விஜய் மல்லையா தற்போதுமூன்றாவது திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

இந்தியவின் பெரும்பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா அவர் இந்திய வங்கிகளில் 9000ஆயிரம் கோடி கடனை வாங்கிவிட்டு அதனை அடைக்காமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர பல முயற்சிகளை இந்திய அரசு செய்துவரும் நிலையில்,மல்லையா தனது விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிய பிங்கி லால்வானியை மூன்றாவதாக திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மல்லையாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது 1986 ஆம் ஆண்டு சமீரா டயாபிஜீ என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.பின்னர் 1993 ஆம் ஆண்டு ரேக்கா மல்லையா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.சித்தார்த் மல்லையா, லீன்னா, தான்யா என மொத்தம் மல்லையாவிற்கு மூன்று பிள்ளைகள். மல்லையாவும், பிங்கியும் 2011 ஆம் ஆண்டு முதல் பழகிவருகின்றனர். தற்போது இவர்களின் காதல் திருமணத்தில் வந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் மல்லையா தனது இரண்டாவது மனைவியிடமிருந்து முறையாக விவகாரத்து இன்னும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vijaymallaya 9000 crore scam london vijaymallya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe