Skip to main content

"கேட்க நிறைய கேள்விகள் உள்ளன.. இருப்பினும் அவர்களுடன் இருப்பதே முக்கியம்.." - மல்லிகார்ஜுன கார்கே

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

mallikarjuna kharge press meet about odisha railway incident 

 

ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

 

சம்பவம் நடந்த இடத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் இந்த விபத்து சம்பவத்திற்கு தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன. இருப்பினும் தற்போது மீட்புப் பணியில் ஈடுபடுவதும், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதும், அவர்களுடன் இருப்பதே முக்கியம். காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும். பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சாலை விபத்தில் ஒருவர் பலி; உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் 

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
s

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(71). நேற்று மாலை குருவராஜபாளையம் சாலையோரம் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர் ஒருவர் மோதியதில் கிருஷ்ணன் (71) தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  வேப்பங்குப்பம் காவல்துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்வதாகவும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட சாலை ஓரம் நடந்து சென்ற பெண் மீது வாகனம் மோதிதால் உயிரிழந்தார்.

இப்படி அடிக்கடி இந்தப் பகுதியில் விபத்து நடப்பதால், இந்தப் பகுதியில் செல்லும் அப்பாவிகள் உயிர் பலியாகி குடும்பம் அனாதையாவதால் விபத்தை தடுக்க இங்கு வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது தற்போது வரை நிறைவேற்றப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இறந்த உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Old man passed away in road accident

இதனையடுத்து பொதுமக்களிடம் வேப்பங்குப்பம் காவல் துறையினரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.