Advertisment

கள்ள நோட்டு விவகாரத்தில் குடும்பத்துடன் சிக்கிய மலையாள நடிகைள்!!

fake notes

Advertisment

57 லட்சம் ரூபாய் மதிப்புள்ளகள்ளநோட்டுகள் அடித்தது தொடர்பாக மலையாள சீரியல் நடிகைகளான சூர்யா அவரது தாய் ரேமா தேவி சகோதரி ஸ்ருதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளாவில் கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் 2.5 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகளை கைப்பற்றி கேரளாவில்இடுக்கி பகுதியை சேர்ந்தலியோ, கருநாகபள்ளியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் புற்றடி பகுதியை சேர்ந்த ரவீந்திரன் ஆகியோரை விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில்இந்த கள்ள நோட்டுகள் எல்லாம் கேரளா கொல்லம் பகுதியில் அச்சிடப்படுவதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கொல்லம் முல்லாங்காடு பகுதியிலுள்ள ஆடம்பர பங்களாவில் சோதனையில் இறங்கிய போலீசார் கள்ள நோட்டு அச்சடிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர் இங்க், ரிசர்வ் வங்கியின் போலி சீல் மற்றும் 57 லட்சம் ரூபாய் மதிப்புள்ளகள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisment

மேலும் இந்த ஆடம்பர பங்களாவின் உரிமையாளரான மலையாள சீரியல் நடிகை சூர்யா சசி. அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரைககைதுசெய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

police Kerala Fake
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe