இந்தியாவில் வேகமாகபரவிவரும்கரோனாவைரஸ் 5000க்கும் மேற்பட்டோரைப் பாதித்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்தியாவில் 5,174 பேருக்குகரோனாஉறுதிசெய்யப்படும் நிலையில், இந்தியாவில் மொத்தமாக 149 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனாபரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணமின்றி இலவசமாக செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.