இந்தியாவில் மென்பொருள் துறையில் முன்னணி வகித்து வரும் டிசிஎஸ் நிறுவனம் (TATA CONSULTANCY SERVICES) மற்றும் இன்போசிஸ் (INFOSYS) நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 42,000 கோடி ரூபாயை நிகர லாபமாக இந்நிறுவனங்கள் ஈட்டியுள்ளனர். மேலும் கர்நாடகா மாநிலம் பெங்களூரை மையமாக கொண்டு இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவனம் மார்ச் - 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 24,016 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அதே போல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாக கொண்டு இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனம் மார்ச் - 31 ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் சுமார் 29,287 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-04-24 at 8.40.15 AM.jpeg)
இந்த இரு நிறுவனங்களும் 2018-2019 ஆம் நிதியாண்டில் சுமார் 53,303 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் (2017-2018) இந்நிறுவனங்கள் சுமார் 11,500 ஊழியர்களை பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டை காட்டிலும் மென்பொருள் துறையில் இந்நிறுவனங்கள் தற்போது ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்திவருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-04-24 at 8.40.18 AM.jpeg)
இதில் டிசிஎஸ் நிறுவனம் 7,775 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியது, அதே நேரத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 3,743 ஊழியர்களை FY18 யில் சேர்த்தது, ஃபோர்டுன் அறிக்கை கூறுகிறது, $ 167 பில்லியன் டாலர் இந்திய மென்பொருள் சேவை துறையில் பணியாற்றும் வேகத்தை அதிகரித்து அடுத்தக்கட்ட முன்னேற்றத்திற்கு அடித்தளமிடுவதாக அமைந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
2019 ஆம் ஆண்டு இந்தியாவில் மென்பொருள் நிறுவனத்தில் சுமார் 2.5 லட்சம் வரை வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மென்பொருள் துறையில் அடுத்த வளர்ச்சியாக கருதப்படும் தகவல் தொழில்நுட்பம், தரவு பகுப்பாய்வு, தீர்வு வடிவமைப்பு, தயாரிப்பு மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மெஷின் கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), ப்ளாக்சைன் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகியவற்றில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் அதிகளவில் பணியில் அமர்த்த வாய்ப்புள்ளது. எனவே இந்திய பொறியியல் படித்த இளைஞர்கள் (TCS, INFOSYS) நிறுவனங்களின் இணையதளத்தை அவ்வப்போது பார்க்க வேண்டும். எனவே இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு IT துறையில் அதிக இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெற உள்ளார்கள் என்பது எவராலும் மறுக்க முடியாது.
பி.சந்தோஷ் , சேலம்.
Follow Us