ADVERTISEMENT

"இனி வாழையிலைதான்" - ஆனந்த் மஹிந்திரா எடுத்த முடிவு....

03:46 PM Apr 11, 2020 | kirubahar@nakk…


ஊரடங்கு காலத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், இனி மஹிந்திரா நிறுவனத்தின் கேன்டீன்களில் வாழையிலையில் தான் உணவு வழங்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 லட்சம் என்ற அளவிலும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3.8 லட்சம் என்ற அளவிலும் உள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால் 7000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரசின் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், இதனால் பெரு நிறுவனங்கள் முதல் விவசாயிகள் வரை பொருளாதார ரீதியிலான இழப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் சந்திக்கும் சிரமங்களைக் குறைக்க உதவும் வகையில் மஹிந்திரா நிறுவனத்தின் கேன்டீன்களில் வாழையிலையில் தான் உணவு வழங்கப்படும் என ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டமானது உடனடியாகச் செயல்படுத்தவும் பட்டுள்ளது.




இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "பத்மா ராம்நாத் என்ற ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் ஒருவர் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில், மஹிந்திரா நிறுவன கேன்டீன்கள் வாழை இலைகளைத் தட்டுகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தினால், அது விளைபொருட்களை விற்பனை செய்யச் சிரமப்படும் வாழை விவசாயிகளுக்கு உதவியாக இருக்குமே எனப் பரிந்துரைத்தார். எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் உடனடியாக இந்த யோசனையை அறிந்து அமல்படுத்தியுள்ளனர். நன்றி!" எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT