Advertisment

மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ...!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மின் வாகனம் உற்பத்தி பிரிவான மஹிந்திரா எலக்ட்ரிக் தனது புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை இன்று அறிமுகம் செய்கிறது. இது லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கக் கூடியது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

as

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் காற்று மாசு போன்ற காரணங்களால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மின் வாகன உற்பத்தியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருகின்றன. மின் வாகனங்கள், பேட்டரி சார்ஜ் வசதியடன் இயங்கக் கூடியது.

Advertisment

இந்த பேட்டரியை முழுதாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் ஆகும். ஒரு முறை முழு சார்ஜ்செய்தால் 130 கி.மீ வரை இயங்கக் கூடியத் திறன் வாய்ந்ததாக அமைந்துள்ளது. அதே சமயம் இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 85 கி.மீ வரை இயங்கும். இதன் தொடக்கவிலை ரூ 1.36 இலட்சம் என தெரிகிறது. தற்போது இது பெங்களூர் மற்றும் ஹைதெராபாத்ஆகிய இரு நகரங்களில் மட்டுமே பயன்பாட்டில்உள்ளது. இது விரைவில் இந்தியா முழுக்க பயன்பாட்டுக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் பெங்களூரில் இதற்காக 100 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

auto treo mahindra electric mahindra and mahindra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe