Advertisment

கேரளாவில் மகாத்மாவின் சிலை உடைப்பு...

man

Advertisment

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாட இந்தியா முழுவதும் தாயாராகி கொண்டிருக்கையில், கேரளா மாநிலம் கொச்சியில் நேற்று காந்தியின் சிலையை இரண்டாக உடைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தேசிய தந்தை என்று சொல்லப்படும் மகாத்மா காந்தியின் சிலையை நேற்று அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உடைத்து இரண்டாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து உடைக்கப்பட்ட சிலை அருகேயெ தர்ணா போராட்டம் காந்தியின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்டது. பின்னர், போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவியில் பதிவாகியுள்ள இச்சம்பவத்தை வைத்து போலிஸ் நடத்திய விசாரணையில் பிஹாரைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kerala Mahatma Gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe