காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிகப்பெரிய திட்டமாக கருதப்பட்டது கிராமப்புற ஏழைகளுக்கு நூறு நாள் வேலை உத்தரவாத திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் பொருளாதார நிலை வேகமாக உயர்ந்தது. மக்களின் வாங்கும் தன்மை அதிகரித்தது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையும் குறையத்தொடங்கியது.

Advertisment

Mahatma Gandhi National Rural Employment 100 days job union government

பொருளாதார நிபுணர்கள் இந்தத் திட்டத்தை மிகவும் பாராட்டினார்கள். ஆனால், காங்கிரஸின் இந்தத் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதில் பாஜக அரசு பல்வேறு திருகுதாள வேலைகளை செய்கிறது. குறிப்பாக இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை பாஜக அரசு குறைத்தது. இந்த நிதியாண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலேயே இதுவரை 96 சதவீதம் செலவாகி இருக்கிறது. இன்னும் உள்ள மூன்று மாதங்களுக்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்தத் திட்டம் பல மாநிலங்களில் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதாவது 15 மாநிலங்கள் இப்போதே அலறத்தொடங்கியிருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம்தான் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையே அடுத்த நிதியாண்டுக்கான ஒதுக்கீடை கடந்த ஆண்டைவிட மிகவும் குறைத்து, 60 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே மோடி அரசு ஒதுக்கியிருக்கிறது.