மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

Advertisment

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோரும் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.