மஹாராஷ்ட்ரா மாநிலம்,ராய்காட் மாவட்டத்தில் உள்ள காலாப்பூர் அருகே மகத் என்னும் கிராமம் இருக்கிறது. கடந்த 18 ஆம் தேதி சுபாஷ் மானே என்பவரின் வீடு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்று வலி எற்பட்டது. பெரியவர்களுக்கு வயிற்று உபாதைகள் எற்பட்டு வலியால் அவதிப்பட்டனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 120 பேர் சிகிச்சை பெற்றுவீடு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து காலாப்பூர் காவலர்கள் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் பிரத்னியா என்ற 23 வயது பெண்ணை பிடித்து காவலர்கள் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சுபாஷ் மானேகாவின் நெருங்கிய உறவினரான அந்தப் பெண் குடும்ப சண்டை காரணமாக தன் கணவர், மாமியார், 2 நாத்தனார்கள் மற்றும் சுபாஷ் மானேவின்குடும்பத்தினரைத் தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளார். பரிமாறப்பட்ட குழம்பில் பூச்சி மருந்தைக் கலந்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து பிரத்னியாவை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">