Advertisment

மருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் பலி; நடந்தது என்ன?

maharastra hospital

மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் இன்று (09/01/2021) அதிகாலை 02.00 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பச்சிளங்குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அதிர்ஷ்டவசமாக 7 பச்சிளங்குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளன.

Advertisment

மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதே விபத்துக்கு காரணம்என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம்தொடர்பாக விசாரணை நடத்தமகாராஷ்டிரா மாநிலமுதல்வர்உத்தவ்தாக்ரேஉத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இந்த துயரச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மகாராஷ்டிராவின் பண்டாராவில் இதயத்தைப் பிழியும் சோகம்நிகழ்ந்துள்ளது. அங்கு நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்"எனகூறியுள்ளார்.

accident fire hospital Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe