38 வருஷமா போராடிட்டேன், வேறு வழி தெரியல... அமைச்சர் முன் விஷம் குடித்த விவசாயி...

38 ஆண்டுகளாக போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதால் அமைச்சர் முன்பு விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.

maharastra farmer fighting for electricity since 1980

மகாராஷ்டிரா மாநிலம் வதோடா கிராமத்தை சேர்ந்த ஈஸ்வர் சுப்ராவ் என்ற விவசாயி கடந்த 15 ஆம் தேதி மல்கபூர் தாலுகாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் அம்மாநில அமைச்சர் முன்னிலையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் தற்போது உடல்நலம் தேறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து ஈஸ்வர் கூறுகையில், “என்னுடைய தாத்தா மின்சாரம் வேண்டி 1980 ஆம் ஆண்டு பதிவு செய்தார். ஆனால் 38 வருடங்கள் ஆகியும் இன்னும் எங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. நான் எல்லாவிதமான முயற்சியும் செய்து பார்த்து விட்டேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை" என தெரிவித்துள்ளார்.

Farmers Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe