Maharashtra, Tamil Nadu: Prime Minister Modi

Advertisment

இந்தியாவில்கரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம்,டெல்லி ஆகிய மாநிலங்களில்கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.தற்போது பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ஹர்ஷவர்த்தன், ஐ சி எம் ஆர் இயக்குனர் பல்ராம்,மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் உடன் அவசரஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கரோனாபரிசோதனை, நோயாளிகளுக்கான படுக்கைகள், மருத்துவ சேவைகளை அதிகரிப்பது குறித்துகலந்தாலோசிக்கப்பட்டது.கரோனா அவசர காலத்திட்டங்களை மேற்கொள்ள சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.அதேபோல் மத்திய சுகாதாரத்துறை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளார்.