7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது டியூஷன் டீச்சரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

maharashtra student and tution teacher

மஹாராஸ்டிர மாநிலம் கோவண்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். பட்டதாரி பெண்ணான அவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த டியூஷன் நடத்தும் பணத்தை வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் அவரிடம் 7 ஆம் வகுப்பு பாடம் படிக்கும் மாணவன் ஒருவன், அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளான். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது தாய் செலவுக்கு பணம் வேண்டும் என கூறி டீச்சரிடம் கடன் கேட்டதாகவும், ஆனால் டீச்சர் பணம் தர மறுத்ததாகவும் கூறியுள்ளான்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் டீச்சரை கொன்றதாகவும் கூறியுள்ளான். தாய் கடன் கேட்ட மறுநாள்அந்த சிறுவன் வழக்கம் போல அடுத்தநாள் டியூஷனுக்கு வந்துள்ளான். இரவு 8 மணியளவில் தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து டீச்சரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் மயங்கி சரிந்த டியூஷன் டீச்சர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிறுவனை கைது செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment