Advertisment

மஹாராஷ்டிரா வழக்கு விசாரணை நாளை ஒத்திவைப்பு!

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி கட்சிகள். சிவசேனா தலைமையில் ஆட்சியமைக்க தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில், நேற்றைய முந்தைய தினம் (22.11.2019) இரவோடு இரவாக பேச்சு முடிந்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்று அதிர்ச்சியூட்டினார். இதனால் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

இந்நிலையில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் தாக்கல் செய்த ரிட் மனு இன்று (24.11.2019) காலை 11:30 மணிக்கு என்.வி. ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

MAHARASHTRA STATE POLITICAL ISSUE SUPREME COURT ORDER

அப்போது சிவசேனா தரப்பில் கபில்சிபல், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் சிங்வி, பாஜக சார்பில் முகில் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர். மஹாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை நீக்கியதில் கடைப்பிடிக்கப்பட நடைமுறைகள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே பாஜக தரப்பு வழக்கறிஞர் முகில் ரோத்தகி, இந்த வழக்கை இன்று விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை என்று வாதிட்டார். அதற்கு நீதிபதிகள் அதை நீங்கள் சொல்ல வேண்டாம். வழக்கை தலைமை நீதிபதி வழக்கை பட்டியலிட்டதால் விசாரிக்கிறோம் என்றனர். ஏற்கனவே ஆட்சியமைக்கப்பட்டு விட்ட நிலையில், எதற்காக உச்சநீதிமன்றத்தில் மனு? என்று கேள்வி எழுப்பிய முகில் ரோத்தகி, மஹாராஷ்டிரா மக்களுக்கு ஒரு அரசு தேவை. ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை எங்கள் தரப்பில் உள்ளது என்று குறிப்பிட்டார்.

Advertisment

நீதிமன்றம் ஆணையிட்டால் நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக உள்ளோம் என்று வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார். மேலும் யாரோ எங்கிருந்தோ கொடுத்த உத்தரவின் பேரில் மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியமைப்பது குறித்த வெளிப்படையான அறிவிப்புகள் இல்லை. எல்லாம் திரைமறைவில் நடந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய கூட்டணி முறிந்த நிலையில், தேர்தலுக்கு பின் கூட்டணி உருவாகியுள்ளது. எந்த ஆதாரங்கள் அடிப்படையில் பட்னாவிஸ், அஜித் பவார் பதவியேற்றுக் கொண்டனர்? என்று கபில்சிபல் வாதிட்டார். மஹாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு இன்ற நடைபெற வேண்டும் என்று கபில்சிபல் தனது வாதத்தை நீதிபதி முன் வைத்தார்.

MAHARASHTRA STATE POLITICAL ISSUE SUPREME COURT ORDER

அதன் தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆட்சியமைப்பதை தவிர்த்த பாஜகவை அவசரமாக அழைத்து ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது ஏன்? பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் கொடுத்தால், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் என்று அபிஷேக் சிங்வி தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரலை செய்ய வேண்டும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பதிலளிக்க மஹாராஷ்டிரா மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் பாரதிய ஜனதாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தையும், முதல்வர் பாட்னாவிஸ்க்கு அளித்த ஆதரவு கடிதங்களையும் நாளை சமர்ப்பிக்க உத்தரவிட்டனர். அதை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை காலை 10.30 நடைபெறும் என்றும், அதன்பின் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சமன்றநீதிபதிகள் அமர்வு தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

MAHARASHTRA GOVERNMENT order Supreme Court India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe