மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆரே பகுதியில், மெட்ரோ பணிக்காக, மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மும்பை நகரின் மிக முக்கிய பகுதியாக கூறப்படும் ஆரே (Aarey) வனப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அங்கு சுமார் 2,700- க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல மனுக்களை மும்பை உயர்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, சுமார் 2,700- க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டும் பணியை, மெட்ரோ நிர்வாகம், வேக வேகமாக மேற்கொண்டது. இதற்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை சந்தித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் கடிதம் அளித்தனர். அதை தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண்மிஸ்ரா, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று விசாரித்தது. அப்போது ஆரே வனப்பகுதியில், மரங்களை வெட்டுவதற்கு நீதிபதிகள் தடை விதித்தனர். அதேபோல் இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்பது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். சுற்றுச்சூழல் குறித்து நாங்களும் அக்கறை கொண்டுள்ளோம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளன. கடந்த 2 நாள்களில் கைது செய்யப்பட்ட 29 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மரங்களை வெட்டுவதற்கு எதிரான வழக்கை 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது விடுமுறைகால சிறப்பு அமர்வு.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cffae7e9-ee32-42de-b6f9-2a2446882432.jpg)
அடுத்த விசாரணை வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வே விசாரிக்கும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)