maharashtira state hospital patients incident police investigation

மஹாராஷ்ட்ரா மாநிலம், பல்கார் மாவட்டத்தில் வசாய் விரார் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா சிகிச்சை மையத்தின் ஐ.சி.யூ. பிரிவில் இன்று (23/04/2021) அதிகாலை 03:15 மணிக்கு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 13 கரோனா நோயாளிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த கரோனா நோயாளிகள் சிலரைஅருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். மேலும், மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

maharashtira state hospital patients incident police investigation

Advertisment

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மாநில வரிசையில் மஹாராஷ்ட்ரா முதலிடம் வகிக்கும் நிலையில், ஏற்கனவே நாசிக்கில் வாயு கசிவு காரணமாகதிடீரென ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதால் 24 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள விபத்துகளால் அம்மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.