சாலையை ஆய்வு செய்ய சென்ற அதிகாரி மீது சேற்றை வாரி ஊற்றிய எம்.எல்.ஏ...வைரல் ஆகும் வீடியோ!

மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை- கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் ரானே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆதரவாளர்களும் அதிகாரியுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளனர்.

MAHARASHTRA STATE ENGINEER AND  CONGRESS MLA FIGHT VIRAL VIDEO

அப்போது அங்கு ஏற்கனவே பக்கெட்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த சேற்றுநீர்எடுத்து வரப்பட்டு அதிகாரியின் மீது ஊற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரியை அவர்கள் பாலத்தில் கட்டி வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அரசு அதிகாரியை பாஜக எம்.எல்.ஏ விஜய் வர்க்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், தற்பொழுது அதே போன்ற மற்றொரு தாக்குதல் சம்பவம் காங்கிரஸ் எம்எல்ஏவால் அரங்கேறியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

CIVIL ENGINEER SURVEY ONE FLY OVER BRIDGE congress Maharashtra MLA FIGHT Mumbai
இதையும் படியுங்கள்
Subscribe