dhananjay munde

இந்தியாவில் கரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மஹாராஷ்ட்ராவில்தான்அதிக அளவிலான கரோனாபாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு ஒரேநாளில் 30,535 பேருக்கு கரோனாதொற்று உறுதியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மஹாராஷ்ட்ரா அரசு, அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Advertisment

இந்தநிலையில்மஹாராஷ்ட்ராசமூகநீதித்துறைஅமைச்சர்தனஞ்சய் முண்டே, இரண்டாவது முறையாக கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்குகடந்த வருடம் ஜூன் மாதத்தில் முதன்முதலாக கரோனாதொற்று உறுதி செய்யப்பட, சிகிச்சை எடுத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக கரோனாவால்பாதிக்கப்பட்டுள்ள அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

மஹாராஷ்டிராவில் நேற்று (23.03.2021) ஒரேநாளில் 28,699 பேருக்கு கரோனா உறுதியானது. அதேநேரத்தில்13,165 பேர் கரோனாவில்இருந்து குணமடைந்துள்ளனர்.

Advertisment