மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா இடையே நடைபெறும் பதவிச்சண்டையில், பாஜகவை ஓரங்கட்டுவதற்காக சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தலைவர்களுக்குள் கருத்துவேறுபாடு நிலவுகிறது.

Advertisment

sonia pawar

ஆனால், எந்த முடிவை எடுத்தாலும் சரத்பவாரின் ஆலோசனைப்படியே எடுக்கும்படி சோனியா அறிவுறுத்தியிருக்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவை சந்தித்து அங்கு நிலவும் குழப்பம் குறித்து ஆலோசித்தனர்.

Advertisment

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சுசில்குமார் ஷிண்டே கூறும்போது, பாஜகவை விட்டு சிவசேனா நிச்சயமாக ஒதுங்காது. அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டுவிடும். காங்கிரஸ் கட்சி ஒரு மதசார்பற்ற கட்சி. மதவெறியை தூண்டும் கொள்கையை உடைய சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது தவறு. சோனியா என்னிடம் கருத்து கேட்டால் நிச்சயம் ஆதரவளிக்கக்கூடாது என்றே சொல்வேன் என்றார்.

எந்த முடிவாக இருந்தாலும் நவம்பர் 5 ஆம் தேதி சோனியாவை சரத்பவார் சந்தித்துப் பேசியபிறகே முடிவாகும் என்று தெரிகிறது.

Advertisment