Advertisment

ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று... தவிப்பில் அண்டை மாநிலம்!

bn

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மராட்டியத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வந்தது. நேற்று 51,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 55,411 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இதன் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,57,326 ஆக அதிகரித்துள்ளது. 5,36,901 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மேலும், 309 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 54,481 பேர் கரோனா தொற்றால் மொத்தமாக மரணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 53,003 பேர் கரோனா தொற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 27,97,056 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe