நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி தினக்கொண்டாட்டம் ஆண்டுதோறும் கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முகேஷ் அம்பானியின் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அங்கு நடைபெற்ற கொண்டாட்டத்தில், திரையுலக பிரபலங்களான அமிதாப் பச்சன், அமீர்கான்,இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சச்சின், ஹர்பஜன்சிங், ஜாகீர் கான், நடிகைகள் காஜல், வித்யாபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.