மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு தனது கைக்குழந்தையுடன் பெண் எம்.எல்.ஏ. வந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில்தேவ்லாலிதொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. சரோஜ்பாபுலால் அகிரேதனது இரண்டரை மாத கைக்குழந்தையுடன் கலந்து கொண்டார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதிதான் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர்பேசும்போது, "கொரோனாகாரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாக்பூரில் சட்டசபைக் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது நான்தாயாகி உள்ளேன். இருப்பினும், எனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்குப் பதில் சொல்ல இங்கு வந்துள்ளேன்" என்றார்.