உயிருடன் இருக்கும் தனது சகோதரியை இறந்துவிட்டதாக கூறி அவரின் காப்பீட்டுத் தொகையை திருட முயன்ற நபர் மஹாராஷ்டிரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

fraud

மஹாராஷ்டிராவின் மாஸ்வி தாலுக்காவைச் சேர்ந்தவர் ரங்குபாய் ஜகந்நாத் ஷிர்கே, எல்.ஐ.சி பாலிசி ஒன்றை எடுத்து அதற்காக மாதாமாதம் பிரிமியம் தொகையைக் கட்டிவந்துள்ளார். அந்த பாலிசிக்கு நாமினியாக தன் சகோதரரான பிரகாஷ் ஸ்ரீபதியை குறிப்பிட்டிருந்தார். இந்த காப்பீட்டுத் தொகையை எப்படியாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது சகோதரன், ரங்குபாய் இறந்துவிட்டதாக தனது நண்பன் மூலம் போலி இறப்பு சான்றிதழ் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

அப்படி தயார் செய்த சான்றிதழை எல்.ஐ.சி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். அதன்பின் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என எல்.ஐ.சி நிறுவனமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த நபரின் சகோதரி ரங்குபாய் தனது பாலிசி குறித்து விசாரிப்பதற்காக எதேச்சையாகஅலுவலகத்திற்கு வந்துள்ளார். இறந்துவிட்டார் என சொல்லப்பட்ட ரங்குபாய் அங்கு வந்ததை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் அவரிடம் நடந்ததை கூறியுள்ளனர். பிறகு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது சகோதரரை காவல்துறை கைது செய்துள்ளது.