Advertisment

"சட்டத்தை யாரும் மீறவில்லை" - அர்னாப் விவகாரத்தில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் கருத்து...

maharashtra home minister about arnab arrest

அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதில் எவ்வித சட்ட மீறலும் நடைபெறவில்லை என மகாராஷ்ட்ர உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisment

மும்பை காவல்துறை ரிபப்ளிக் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் இல்லத்திற்குள் நுழைந்து இன்று காலை அவரை கைது செய்தது. கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதற்கு இவர்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னாப் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தனது வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர் தன்னை, தனது மகன் மற்றும் மனைவியை உடல் ரீதியாகத் தாக்கியதாகவும் அர்னாப் கோஸ்வாமி தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ரிபப்ளிக் தொலைக்காட்சியில் வெளிவந்த வீடியோவின் படி, மும்பை போலீஸார் அர்னாப் கோஸ்வாமியை அடித்து முடியைப் பிடித்து இழுத்து வாகனத்தில் ஏற்றியதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், "அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் யாரும் சட்டத்தை மீறவில்லை. மேலும், கட்டிட வடிவமைப்பாளரின் குடும்பம் அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுகிய பின்னரே வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

Arnab Goswami Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe