மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் பல மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்று வருகிறது.

Advertisment

maharashtra

இதில் மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி 164 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் காலையில் இருந்து முன்னிலை வகித்து வருவதால், மஹாராஷ்டிராவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சியமைக்க இருக்கிறது.

Advertisment

கருத்து கணிப்பு முடிவுகள் தங்களுக்கு சாதகமாக உள்ளதாலும், தற்போதைய வாக்கு எண்ணிக்கை பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாலும் மும்பையில் உள்ள பாஜகவின் மகாராஷ்டிர மாநில தலைமை அலுவலகம் கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாக்கப்பட்டுள்ளது.