maharashtra

இந்தியாவில் கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.முதல் இரண்டு அலைகளிலும் நாட்டிலேயே கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்ட்ராவில் மீண்டும் கரோனாபாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் அம்மாநிலத்தில் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இதில் மும்பையில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள கரோனாபாதிப்புகள், அடுத்த மாத நடுப்பகுதியில் உச்சத்தை அடையாளம் என்றும், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் குறைய தொடங்கலாம் எனவும்மஹாராஷ்ட்ராசுகாதாரத்துறை கூறியுள்ளது.

Advertisment

மேலும் மஹாராஷ்ட்ராசுகாதாரத்துறை, "தற்போது ஊரடங்கு விதிப்பது குறித்து பரிசீலிக்கவில்லை. மாநிலத்தில் மருத்துவ ஆக்சிஜனின் ஒருநாள் தேவை 800 மெட்ரிக் டன்னை தாண்டினாலோ, மருத்துவமனைகளில்40 சதவீத படுக்கைகள் நிரம்பினாலோ மஹாராஷ்ட்ரா அரசு, ஊரடங்கு குறித்தோ அல்லது ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் குறித்தோபரிசீலிக்கும்" என கூறியுள்ளது.