மகாராஷ்டிரா மாநில அரசியலில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், அம்மாநில சட்டப்பேரவைக் கலைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக் கலைக்கப்படும் சூழல் நெருங்கி வருவதாகசிவசேனாகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய்ராவத்தனது அதிகாரப்பூர்வட்விட்டர்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆளும்சிவசேனாகட்சிக்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில், அமைச்சர்ஏக்நாத்ஷிண்டேஅதிருப்தியாளராக மாறியுள்ளார். இதனால்சிவசேனாகட்சியின் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன்ஏக்நாத்ஷிண்டேஅசாம்மாநிலம், கவுகாத்தியில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளார். தனக்கு 40 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மகாராஷ்டிராவில்சிவசேனாகூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில்சிவசேனாஅதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர்உத்தவ்தாக்கரேதலைமையிலான அரசுக்குஎதிராகப்போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில், மகாராஷ்டிர விகாஸ்அகாதிகூட்டணி ஆட்சி பெரும்பான்மையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிருப்தியில் உள்ள சட்டமன்றஉறுப்பினர்களைச்சமாதானப்படுத்தும்சிவசேனாகட்சியின் முயற்சியில் பலன் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பா.ஜ.க. ஆட்சி அமைவதைத்தடுப்பதற்காகச்சட்டப்பேரவையைக் கலைக்கசிவசேனாதிட்டமிட்டுவருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.