Maharashtra government allows sale of wine through supermarkets and shops

Advertisment

மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் 'ஒயின்' விற்பனைக்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது மதுக்கடைகளில் மட்டுமே 'ஒயின்' விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் 'ஒயின்' பாட்டில்களை விற்பனை செய்ய மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 100 சதுர மீட்டர் மற்றும் அதற்கும் மேற்பட்ட வசதிகளை உடைய இடங்களில்'ஒயின்' விற்பனை செய்யலாம் என்றும், அதே நேரத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே விற்பனை செய்யக்கூடாது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பழச்சாறும் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், இந்த முடிவு எடுத்துள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசின் முடிவுக்கு அம்மாநில பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.