maharashtra former navy officer supports bjp

சிவசேனா கட்சியினரால் சரமாரியாகத் தாக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரி, இனி பாஜகவிற்கு ஆதரவளிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

Advertisment

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள கண்டிவள்ளி பகுதியில் 65 வயதான முன்னாள் கடற்படை அதிகாரி மதன் சர்மா வசித்து வருகிறார். இவர் மகாராஷ்ட்ர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தொடர்பாக தனக்கு வந்த கேலி கார்ட்டூனை தனது குடியிருப்புச் சங்கத்தின் வாட்ஸப் குரூப்பில் அனுப்பியுள்ளார். இந்த கார்ட்டூன் சிவசேனா தொண்டர்கள் சிலருக்கும் சென்றுள்ளது.

Advertisment

இதனையடுத்து அவரது குடியிருப்புக்குச் சென்ற சிவசேனா தொண்டர்கள் மதன் சர்மாவைத் துரத்தித் துரத்தி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த மதன் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும், இவரைத் தாக்கிய விவகாரத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இனி பாஜகவிற்கு ஆதரவளிக்கப்போவதாக மதன் சர்மா அறிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறுகையில், இந்த நிமிடத்திலிருந்து தான் பாஜக-ஆர்எஸ்எஸ்-ல் இணைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.