Skip to main content

மகாராஷ்டிராவில் மீண்டும் பொதுமுடக்கம்..? - இன்று இரவு முதல்வர் உரை!

Published on 13/04/2021 | Edited on 13/04/2021

 

g


இந்தியாவில் மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. மகாராஷ்டிராவில் 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக அங்கு கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் பொதுமுடக்கம், விடுமுறை தினங்களில் பொதுமுடக்கம் என்று அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருந்தாலும், தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகிறது.

 

இந்நிலையில், அம்மாநிலத்தில் கரோனா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று இரவு 8 மணிக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கிறார். குறிப்பிட்ட சில நாட்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பை முதல்வர் அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்