Advertisment

பிரதமர் மோடியுடன் விழாவில் பங்கேற்ற ராமர் கோயில் அறக்கட்டளை தலைவருக்கு கரோனா...

mahant nritya gopal das tests positive for corona

Advertisment

பிரதமர் மோடி பங்கேற்ற, அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவரான மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ், அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகளைக் கவனித்து வருகிறார். அவருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டதைதொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அவருக்கு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கவும், உயர்தரமான மருத்துவக் கவனிப்பு அளிக்கவும் முதல்வர் ஆதித்யநாத் மதுரா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Ram mandir corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe