Advertisment

உச்சநீதிமன்ற நீதிபதியாக மகாதேவன் பெயர் பரிந்துரை!

Mahadevan's name recommended as Supreme Court judge

Advertisment

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்களில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று ஜம்மு - காஷ்மீர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் கோட்டீஸ்வர் சிங்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் நீதிபதி கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் முதல் நீதிபதி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்க உள்ள ஆர். மகாதேவன் சென்னையில் கடந்த 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி (10.06.1963) பிறந்தவர். இவர் 1989 ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். இவர் மறைமுக வரிகள், சுங்கம் மற்றும் மத்திய கலால் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார். சிவில் மற்றும் கிரிமினல் மற்றும் ரிட் தரப்புகளில் 25 ஆண்டுகள் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றவர். மேலும் வரிகள் தொடர்பான விவகாரங்களில் தமிழக அரசின் கூடுதல் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

 Mahadevan's name recommended as Supreme Court judge!

Advertisment

அதோடு மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞராகவும், இந்திய அரசின் மூத்த வழக்கறிஞராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தியுள்ளார். அதன் பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இதனையடுத்து இவர் கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Judge
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe