மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் சில தினங்களுக்கு முன் நடந்தது. குறைந்த வாக்குபதிவு நடந்த மராட்டியசத்தில் ஜல்கான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச் சாவடிக்கு தொழிலதிபர் ஆனந்த் மராத்தி என்பவர் வந்தார். அவர் சாதாரணமாக வராமல், யானை மீது அமர்ந்து வந்தார். வாக்குச்சாவடிக்கு யானை வருவதை பார்த்த பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் தொழிலதிபர் ஆனந்த் மற்றும் யானையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Advertisment

இதற்கிடையில், யானையை வாக்குச்சாவடிக்கு வெளியே நிறுத்திவிட்டதால் அங்கு கூடியிருந்த மக்களை சமாளிப்பதில் காவலர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. செய்தியாளர்களிடம் இதுகுறித்து ஆனந்த் கூறும்போது, " வாக்களிப்பின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவே யானையில் வந்தேன். பரபரப்புக்காக யானையை நான் பயன்படுத்தவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.