Advertisment

பெரிய மீசை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிள்

mp constable

மத்தியப்பிரதேச மாநில காவல்துறையில், ஓட்டுநராகப் பணி புரிந்தகான்ஸ்டபிள் ராகேஷ் ராணா, அவரது நீளமான மீசையின் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மத்தியப் பிரதேச காவல்துறை சேர்ந்த உயரதிகாரிகள், நீளமான மீசையைக் குறைக்கும்படிராகேஷ் ராணாவிற்குஉத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

ஆனால் தனது மீசையைக் குறைத்துக்கொள்ளராகேஷ் ராணா மறுக்கவே, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ராகேஷ் ராணாவின் மீசை மற்ற காவல்துறையினர் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக இடைநீக்க உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisment

அதேநேரத்தில், "நான் ஒரு ராஜ்புட். எனது மீசை எனது பெருமை" எனக் கூறியுள்ளராகேஷ் ராணா, மீசையை மழித்துக்கொள்ளப்போவதில்லைஎனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe