Advertisment

மத்தியப் பிரதேச அரசியல் குழப்பத்தின் அதிரவைக்கும் பின்னணி...

மத்தியப்பிரதேச அரசியலில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்த நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானஜோதிராதித்யசிந்தியா கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

Advertisment

madhyapradesh political crisis reason and Jyotiraditya Scindia resignation

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

மத்தியப்பிரதேசத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ்ஆட்சியைப்பிடித்தது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் தங்களதுஆட்சியைக்கலைக்க பாஜக தொடர்ந்துமுயன்றுவருவதாகக்காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பாஜக தலைவர்கள் பெரும்தொகையைக்காங்கிரஸ்சட்டமன்ற உறுப்பினர்களுக்குத்தருவதாகப்பேரம் பேசிவருவதாகக்காங்கிரஸ் மூத்த தலைவர்திக்விஜய்சிங்குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரானஜோதிராதித்யசிந்தியா கட்சியிலிருந்து விலகியுள்ளார். இன்று காலை பிரதமர்மோடியைச்சந்தித்தஜோதிராதித்யசிந்தியா தனது ராஜினாமாகடிதத்தைச்சோனியா காந்திக்குஅனுப்பியுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 26 ஆம் தேதிமத்தியப்பிரதேசம் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,ஜோதிராதித்யசிந்தியா தரப்புக்குசீட்வழங்குவதில் கமல்நாத் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்ததாகவும்,ஜோதிராதித்யசிந்தியா தரப்புக்குசீட்கொடுக்காமல் இருப்பதற்காகவே பிரியங்கா காந்தியைமத்தியப்பிரதேசத்தில் போட்டியிட வைக்க கமல்நாத்முயன்றதாகவும்தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போதுஜோதிராதித்யசிந்தியா காங்கிரஸ் கட்சியிலிருந்துவிலகுவதாகத்தெரிவித்துள்ளார்.

ஜோதிராதித்யசிந்தியா ஆதரவுசட்டமன்ற உறுப்பினர்கள்காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும்பட்சத்தில்மத்தியப்பிரதேசத்தில்காங்கிரஸ் ஆட்சி கலையவாய்ப்பிருப்பதாகக்கணிக்கப்பட்டுள்ளது. 230சட்டமன்ற உறுப்பினர்களைகொண்டமத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் 114சட்டமன்ற உறுப்பினர்களைகொண்டுள்ளது, பாஜக 107சட்டமன்ற உறுப்பினர்களைகொண்டுள்ளது.இந்த சூழலில், 19சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்டுள்ளதாக கூறப்படும் சிந்தியாவின் பதவி விலகல் காங்கிரஸ்கட்சிக்குச்சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.

congress KAMAL NATH MadhyaPradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe