நேற்று 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஏனைய மாநிலங்களில் ஓட்டு எண்ணும் பணி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய பிரதேசத்தில் மட்டும் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. கிட்டதட்ட 24 மணிநேரமாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி, காங்கிரஸ் 113 இடங்கள் வென்று 1 இடத்தில் முன்னிலை வகித்துள்ளது. பாஜக 108 இடங்களில் வென்று ஒரு இடத்தில் முன்னணியில் உள்ளது. மொத்தம் 230 தொகுதிகள் உள்ள நிலையில்115இடங்கள் வென்றால் தனிப்பெரும்பான்மை கிடைக்கும். தற்போதுவரை யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மற்ற கட்சிகளை இணைத்து பாஜக ஆட்சியமைக்க முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
24 மணிநேரமாக நடக்கும் வாக்கு எண்ணிக்கை... மத்திய பிரேதசத்தில் தொடர்ந்து இழுபறி!!!
Advertisment