நீதிமன்ற வளாகத்தில் சரமாரியாக தாக்கப்பட்ட பாலியல் வழக்கு குற்றவாளிகள்... (வீடியோ)

தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு, உன்னாவ் பெண் உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்தியபிரதேசம் மற்றும் கேரளாவில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட போது அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டனர்.

madhyapradesh and kerala court incidents

2017 ஆம் ஆண்டு வலயார் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை அங்கிருந்தவர்கள் தாக்கினர். இதனையடுத்து குற்றம் சுமத்தப்பட்ட நபரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதேபோல மத்தியபிரதேசம் மாநிலம் இண்டோர் பகுதியில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிமன்ற வளாகத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள் தாக்கினர். ஒரே நாளில் வெவ்வேறு வழக்குகளில், வெவ்வேறு இடங்களில் பாலியல் குற்றவாளிகள் தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Madhya Pradesh unnao
இதையும் படியுங்கள்
Subscribe