Published on 11/10/2018 | Edited on 11/10/2018

மத்திய பிரதேசத்திலுள்ள பன்னாவில் வைர சுரங்கம் உள்ளது. இதில் உலகிலேயே 2வது தரமான வைர வகைகள் கிடைப்பதாக சொல்கின்றனர். இந்த பகுதியில் 1961ஆம் ஆண்டு தோண்டும் போது, வைரம் ஒன்று கிடைத்துள்ளது.
இந்நிலையில், அதே இடத்தில் நேற்று பிரஜாபதி என்பவர் தோண்டும்போது, மிகப்பெரிய வைரம் கிடைத்து அந்த ஏழை சுரங்க ஊழியருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இது 42.59 காரட் இருக்கும் என்றும். மேலும் இதன் மதிப்பு ரூ. 1.5 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து வைரத்தை எடுத்த மோதிலால் பிரஜாபதி கூறுகையில்,” ஒன்றரை மாத உழைப்பிற்கு கிடைத்த பலன். முதலில் 5 லட்சம் கடன் இருக்கிறது. அந்த கடனை அடைப்பேன். என் குடும்ப கஷ்டத்தை இந்த ஒரு வைரம் சரி செய்யப்போகிறது” என்றார்.