அரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார், சோனிபத் நகர் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை செத்த எலி என பொருள்படும் வகையில் பேசினார்.

Advertisment

madhya pradesh minister controversial speech

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்தியபிரதேச காங்கிரஸ் அமைச்சர், பாஜக எம்.பி ஹேமமாலினி குறித்து கொச்சையான வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் மத்தியபிரதேச மாநிலத்தில் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் பி.சி. சர்மா, பொதுப்பணி துறை அமைச்சர் சஜ்ஜன் வர்மா உடன் சாலை வசதி குறித்து ஆய்வுசெய்ய சென்றார்.

Advertisment

அப்போது, "வாஷிங்டன் மற்றும் நியூயார்க் போன்று சாலைகள் அமைத்ததாக பாஜக கூறியது. ஆனால் இந்த சாலைகள் அதற்குள்ளாகவே சின்னம்மை வந்ததுபோல் குண்டும் குழியுமுமாக ஆகிவிட்டது. தற்போது பா.ஜ.க. பொது செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கன்னங்கள் போன்று காணப்படும் இந்த சாலை, இன்னும் 15 நாட்களில் ஹேமா மாலினியின் கன்னங்கள் போன்று அழகாக்கப்படும்" என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.