மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூரைசேர்ந்தஆனந்த் பிரகாஷ் சௌக்சே, தாஜ்மஹாலை போன்ற ஒரு வீட்டினை கட்டி தனது மனைவிக்கு பரிசளித்துள்ளார். 4 படுக்கையறைகளுடன் கூடிய இந்த வீடு தாஜ்மஹாலின் 3டி படத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம்90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளஇந்த வீடு இரண்டு தளங்களோடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் சமையலறை, நூலகம், தியான அறை ஆகியவையும் அமைந்துள்ளது. தாஜ்மஹாலையும், தாஜ்மஹாலை போலவே இருக்கும் பீபி கா மக்பராவையும் நேரில் சென்று பார்த்து, ஆய்வு செய்து இந்த வீட்டை கட்டியுள்ளார்.
புர்ஹான்பூருக்குவரும் எந்த சுற்றுலாப் பயணியும் தவற விடக் கூடாதகாட்சிப் பொருளாகத்தனது வீடு இருக்குமெனஇந்த வீட்டைக் கட்டியஆனந்த் பிரகாஷ் சௌக்சேநம்பிக்கை தெரிவித்துள்ளார்.